இன்றைய வார்த்தை - கர்த்தரே நம்மை ஆள்பவர்

இன்றைய வார்த்தை - கர்த்தரே நம்மை ஆள்பவர்

இன்றைய வார்த்தை:
23.02.2024 / வெள்ளி 
வசனம்:
நியாயாதிபதிகள் 8:2
"அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்."
 
செய்தி:
          கர்த்தரே நம் தேவன். அவரே நம்மை ஆள்பவர். அவரே நம்மை ஆட்கொண்டு நடத்துவார். நாம் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அவருடைய ஆளுகையை விட்டு வெளியே செல்லும் போது நமக்கு தீங்கு நேரிடும். நாம் பரிசுத்தமாக வாழும்போது அவருடைய ஆளுகைக்கு உட்பட்டிருப்போம். அவர் நம்மை ஆளும்போது அவர் சொற்படி கேட்டு அதன்படி நாம் நடப்போம். அவர் நம்மை ஆண்டு கொள்ள நாம் ஒப்புக்கொடுக்கும் போது அவர் நம்மை நல்வழியில் நடத்துவார். பாவங்களுக்கு விலக்கி பரிசுத்தமாக வாழ நமக்கு உதவி செய்வார். அவருக்கு விரோதமான பாவங்களை செய்யும்போது அவர் நம்மை ஆள்வதற்கு அது தடையாக இருக்கிறது. ஆகவே நாம் பரிசுத்தமாக நீதியின் வழியில் நடந்து அவர் நம்மை ஆள ஒப்புக்கொடுக்க வேண்டும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரால் வழிநடத்தப்பட ஜெபிப்போம்.
Reactions

Post a Comment

0 Comments

close