இன்றைய வார்த்தை - கர்த்தரே சமாதானபிரபு

இன்றைய வார்த்தை - கர்த்தரே சமாதானபிரபு

இன்றைய வார்த்தை:
02.05.2023 / செவ்வாய் 
வசனம்:
யோபு 25:2 
"அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்."
செய்தி:
             நம் கர்த்தரே சமாதான காரணர். அவரே நமக்கு சமாதானத்தை தருபவர். நாம் எவ்விதமான மனப்போராட்டத்தில் இருந்தாலும் கர்த்தர் அதிலிருந்து நமக்கு விடுதலை தருவார். நம் மனதில் சமாதானத்தை தருவார். நம்மை சந்தோஷத்தால் நிரப்புவார். அவரே சமாதானத்தை உருவாக்குபவர். எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் அதின் மத்தியில் நமக்கு சமாதானத்தை தருபவர் கர்த்தரே. அவர் யேகோவா ஷாலோம். சமாதானத்தின் தேவன். அவரை நாம் விசுவாசிக்கும் போது நம் வாழ்வில் அதிசயங்களை செய்து நமக்கு சமாதானத்தை தருவார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரிடமிருந்து சமாதானத்தை பெற்று கொள்ள ஜெபிப்போம்.
Reactions

Post a Comment

0 Comments

close