01.03.2023 / புதன்
வசனம்:
சங்கீதம் 91:1
"உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். "
செய்தி:
கர்த்தரே நம்மை காக்கிறவர். அவரே நாம் ஆபத்துக்கு மறையும் மறைவிடம். நாம் புயலுக்கு ஒதுங்கும் உறைவிடம். தும் வெயிலுக்கு ஒதுங்கும் நிழலானவர். அவரை நாம் உறைவிடமாக கொண்டால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. அவரை அடைக்கலமாக கொண்ட நாம் பாக்கியவான்கள். அவரை நாம் விசுவாசிக்கும்போது அவர் நம்மை கண்மணிபோல் காத்து கொள்வார். நம் பாதம் கல்லில் இடறாதபடி நம்மை காத்துக் கொள்வார். தமது தூதர்களை கொண்டு நம்மை காத்து நடத்துவார். நம்மை காக்கிற தேவன் உறங்குவதில்லை. நம் சிந்தையை பாவத்துக்கு விலக்கி காத்து நம்மை பரிசுத்தமான வழியில் நடத்துபவரும் அவரே.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தரால் காக்கப்பட ஜெபிப்போம்.

0 Comments