இன்றைய வார்த்தை - மகிழ்ந்து களிகூருங்கள்

இன்றைய வார்த்தை - மகிழ்ந்து களிகூருங்கள்

இன்றைய வார்த்தை:
24.05.2023 / புதன் 
வசனம்:
யோவேல் 2:21 
"தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்."

செய்தி:
           நாம் ஒருபோதும் பயப்பட கூடாது. கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவரில் என்றும் களிகூர வேண்டும். அவர் நம்மோடிருப்பதால் நாம் எதற்கும் பயப்பட கூடாது. எந்த நிலையிலும் தளர்ந்துவிட கூடாது. அவரில் அன்புகூர வேண்டும். என்றும் அவரில் மகிழ வேண்டும். அவருக்காக என்றும் வாழ வேண்டும். அவர் நமக்கு பெரிய காரியங்களை செய்திருக்கிறார். ஆகவே நாம் அவருக்காக வாழ வேண்டும். அவர் நமக்கு செய்த அற்புதங்களை நினைத்து மகிழ்ச்சியோடு அவரை துதிக்க வேண்டும். அவர் நமக்கு செய்தவற்றை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூர ஜெபிப்போம்.
Reactions

Post a Comment

0 Comments

close