06.03.2023 / திங்கள்
வசனம்:
I கொரிந்தியர் 12:27
"நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்."
செய்தி:
நாம் அனைவரும் கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் அவர் சரீரத்தில் தனித்தனி அவயவங்களாக இருக்கின்றோம். நம் ஒவ்வொருவரை குறித்தும் ஒரு நோக்கம் உண்டு. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு. நாம் ஒவ்வொருவரும் நம் வேலையை சரியாய் செய்தால் தான் சரீரம் ஒழுங்காய் செயல்படும். ஒருவருக்கு ஏதாகிலும் துன்பம் ஏற்பட்டால் அது நம்மனைவருக்கான துன்பமாக ஏற்றுக் கொண்டு ஜெபிக்க வேண்டும். எல்லாவற்றிலும் ஒருமனதாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒருமனதாக செய்ய வேண்டும்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கிறிஸ்துவில் ஒருமனதாக இருக்க ஜெபிப்போம்.
0 Comments