இன்றைய வார்த்தை:
08.04.2024 / திங்கள்
வசனம்:
ரோமர் 4:13 
"அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது."
 
செய்தி:
            கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமானால் நமக்கு விசுவாசம் மிகவும் முக்கியமானது. அவருடைய வார்த்தையை கேட்பது மட்டுமல்லாமல் அதை உறுதியாக விசுவாசிக்க வேண்டும். ஆபிரகாமுக்கு ஆசீர்வாதங்கள் நியாயப்பிரமாணத்தால் கிடைக்கவில்லை. அவன் அவருடைய வார்த்தையை விசுவாசித்து அதன்படி செய்ததினால் மட்டுமே கிடைத்தது. அவருடைய வார்த்தையை கேட்கிறவர்களாக இருக்க கூடாது. விசுவாசமானது நமக்குள் உறுதியாக இருக்க வேண்டும். அவர் செய்த அற்புதங்களை நாம் விசுவாசிக்க வேண்டும். அவர் நமக்காக எதையும் செய்வார் என விசுவாசிக்க வேண்டும். ஆபிரகாம் எங்கு போக போகிறோம் என்று தெரியாமல் கர்த்தருடைய வார்த்தையை உறுதியாக விசுவாசித்தான். அதை கேட்டு அப்படியே விட்டு விடாமல் அதனை தனது செயலில் காட்டினான். ஆகவே தேவனுடைய வார்த்தையை கேட்பதை விட அதனை கேட்டு விசுவாசித்து பின்பற்றுவதே மிக மிக முக்கியம். அப்போது மட்டுமே ஆபிரகாமுக்கு வாக்கு தந்து அதை நிறைவேற்றியது போல நமக்கும் வாக்கு தந்து அதனை நிறைவேற்றி ஆசீர்வதிப்பார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரை விசுவாசித்து வாழ ஜெபிப்போம்.