இன்றைய வார்த்தை:
12.04.2024 / வெள்ளி 
வசனம்:
ரோமர் 4:20-22 
"தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,  தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது."
 
செய்தி:
              நம் சூழ்நிலைகள் மிகவும் கடினமானதாக இருக்கலாம். நம் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கலாம். நம் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கலாம். ஆனாலும் கர்த்தர் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களை பிடித்துக்கொண்டு அவற்றை விசுவாசிக்க வேண்டும். சூழ்நிலைகளை கண்டு மனந்தளர கூடாது. சூழ்நிலைகளை கண்டு அவிசுவாசிக்க கூடாது. அவருடைய வார்த்தையை குறித்து சந்தேகப்படாமல் உறுதியாய் அவர் சொன்ன வார்த்தையை விசுவாசிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கர்த்தர் தாம் சொன்னதை செய்ய வல்லவராக இருக்கிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும். அப்போது நாம் நினைத்ததற்கும் வேண்டுவதற்கும் அதிகமாக நமக்கு செய்ய வல்லவராக இருக்கிறார். சூழ்நிலைகள் மாறுதலாக இருந்தாலும் அவர் நமக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கும் போது அந்த விசுவாசம் நமக்கு நீதியாக எண்ணப்படும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரை விசுவாசிக்க ஜெபிப்போம்.