இன்றைய வார்த்தை:
01.04.2024 / திங்கள் 
வசனம்:
ரோமர் 2 : 1-15

செய்தி:
           நாம் பிறருக்கு ஒரு காரியத்தை செய்யும்படி போதிப்பதற்கு முன் நாம் அந்த காரியத்தை செய்ய வேண்டும். நாம் ஒரு பாவத்தை செய்துகொண்டே பிறரிடம் அதே பாவத்தை செய்ய கூடாது என போதிக்க கூடாது. அவ்வாறு நாம் செய்தால் நம்மை நாமே குற்றவாளியாக தீர்க்கிறோம். ஆகவே நாம் பின்பற்றுகிற காரியங்களை மட்டுமே பிறருக்கு போதிக்க வேண்டும். நாம் பாவத்தை விட்டு விலகாமல் பிறருடைய பாவத்தை குறித்து குற்றம் சாட்டினால் கர்த்தரே நம்மை தண்டிபபார். மேலும் நாம் செய்யும் செயல்களுககேற்ற பலனையே நாம் அடைவோம். நாம் நன்மையானதை பிறருக்கு செய்யும் போது கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து நித்திய ஜீவனை அளிப்பார். நாம் பிறருக்கு தீங்கு செய்தால் கர்த்தர் நம்மை தண்டிப்பார். நாம் விசுவாசியாக இருந்து பாவம் செய்தால் கர்த்தர் நம்மை நியாயப்பிரமாணததினாலே தண்டிப்பார். நாம் இரட்சிக்கப்படாதிருக்கும் போது செய்யும் பாவங்கள் நம்மை கர்த்தரை விட்டு இன்னும் தூரமாக கொண்டு செல்லும். ஆகவே நாம் அவருடைய வார்த்தையை கேட்பது மட்டுமல்லாமல் அதன்படி செய்ய வேண்டும். நம் வாழ்க்கையின் மூலமாக அவருடைய வார்த்தை வெளிப்பட வேண்டும். அப்போதே அவருடைய நாமம் மகிமை படும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் நற்கிரியைகளை செய்ய ஜெபிப்போம்.