இன்றைய வார்த்தை:
07.03.2024 / வியாழன் 
வசனம்:
நியாயாதிபதிகள் 20:18-35
 
செய்தி:
            இந்த வேத பகுதியில் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களிடம் பென்யமீனருககு எதிராக யுத்தத்துக்கு செல்ல சொல்லுகிறார். அவர்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்ட போது அவர்களுக்கு பதிலளித்து யுத்தத்துக்கு செல்லும்படியாக கட்டளையிட்டார். ஆனாலும் அவர்கள் யுத்தத்துக்கு சென்று இரண்டு முறை தோற்றுப் போனார்கள். ஆனால் மூன்றாவது முறையாக கர்த்தரிடம் விசாரித்து அவர் அறிவுரையை பெற்று ஒரு திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்தினார்கள். அப்போது கர்த்தர் அவர்களுக்கு வெற்றி கொடுத்தார். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வதென்னவெனில் நாம் கர்த்தரிடம் ஒரு காரியத்தை விசாரித்தால் மட்டும் போதாது. நாம் விசாரித்துவிட்டு எந்தவித முன்னேற்பாடுமில்லாமல் அதை செய்தால் அது நமக்கு தோல்வியாகவே முடியும். நாம் கர்த்தரிடம் விசாரித்துவிட்டு அதை குறித்து சிந்தித்து சரியான திட்டம் ஒன்றை உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டும். அந்த திட்டங்களை உருவாக்க கர்த்தரிடம் ஞானத்தை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய ஆலோசனையோடு நாம் திட்டங்களை செயல்படுத்தும் போது இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் வெற்றியை கொடுத்தது போல் நமக்கும் காரியங்களை வாய்க்க பண்ணுவார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து திட்டமிட ஜெபிப்போம்.