இன்றைய வார்த்தை:
01.03.2024 / வெள்ளி 
வசனம்:
நியாயாதிபதிகள் 18ஆம் அதிகாரம்
 
செய்தி:
            நாம் கர்த்தருக்கு பிரியமாக வாழ வேண்டும். நல்வழிகளில் நடக்க வேண்டும். நீதியின் பாதையை பின்பற்ற வேண்டும். பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும். ஒருபோதும் பாவங்களை பின்பற்ற கூடாது. அநீதிக்கு ஒருபோதும் துணைபோக கூடாது. பரிசுத்தமாக வாழ்வதே நம் வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும். நாம் எதை செய்தாலும் அவர் நாம மகிமைக்காக செய்ய வேண்டும். இந்த அதிகாரத்தில் மீகா என்பவன் விக்கிரகத்தை உருவாக்கினான். அவர் செய்த சிறிய தவறினால் அவனுக்கு பின்வந்த ஜனங்கள் அந்த விக்கிரகத்தை பின்பற்றினார்கள். அவனுடைய செயலினால் அநேகர் பாவத்தில் விழுந்து தேவனுடைய கட்டளையை மீறினார்கள். கர்த்தரை விட்டு விலகி போனார்கள். அவனுடைய செயல் அநேக ஜனங்களல கர்த்தரிடமிருந்து பிரித்து விட்டது. ஆகவே இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவெனில்: நாம் பிறருக்கு நன்மை செய்யவில்லை என்றால் கூட ஒருபோதும் தீமை செய்து விட கூடாது. பிறருடைய இடறுதலுக்கு நாம் காரணமாகி விடகூடாது. பிறர் பாவம் செய்ய நாம் வழி வகுக்க கூடாது. நாம் பிறருக்கு முன் மாதிரியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். பிறர் பாவம் செய்ய நாம் காரணமானால் நாமும் அதற்கான தண்டனையை பெறுவோம். ஆகவே நாமும் பரிசுத்தமாக வாழ்ந்து பிறரையும் பரிசுத்தத்துக்கு நேராக வாழிநடத்துவோம்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் நல்வழியில் நடக்கும்படி ஜெபிப்போம்.