இன்றைய வார்த்தை:
27.02.2024 / செவ்வாய் 
வசனம்:
நியாயாதிபதிகள் 17:2
"அவன் தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்."
 
செய்தி:
           நாம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். அவர் நம்மை ஆசீர்வதித்தால் மட்டுமே அது நிலையானதாக இருக்கும். அவருடைய ஆசீர்வாதமே நமக்கு ஐசுவரியத்தை தரும். அவருடைய ஆசீர்வாதத்தில் வேதனை இருக்காது. அவருடைய ஆசீர்வாதத்தில் சந்தோஷம் உண்டு. அவர் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதத்தின் மூலம் அவர் நாமம் மகிமைப்படும். ஆகவே உலக ஆசீர்வாதத்தின் மேல் நம் இதயம் செல்ல கூடாது. கர்த்தருடைய காரியங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கும் போது அவர் நமக்கு உலக காரியங்களையும் நித்திய ஜீவனையும் கொடுப்பார். ஆகவே நாம் பாவங்களை விட்டு விலகி பரிசுத்தமாக வாழ வேண்டும். அவருக்கு பிரியமாக வாழும்போது அவர் தெய்வீக ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்புவார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட  ஜெபிப்போம்.