இன்றைய வார்த்தை:
25.02.2024 / ஞாயிறு
வசனம்:
நியாயாதிபதிகள் 10:15-16 
"இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி, அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்."
 

செய்தி:
             நாம் நம் பாவங்களை விட்டு விலக வேண்டும். நம் பாவங்களை கர்த்தரிடத்தில் அறிக்கை செய்ய வேண்டும். நம் பாவங்களை கர்த்தரிடத்தில் மறைக்க கூடாது. நாம் நம் பாவங்களை அறிக்கை செய்யும் போது அவர் அவற்றை நமக்கு மன்னிப்பார். நாம் அவற்றை மறைக்கும் போது அவர் நமக்கு அதற்கேற்ற தண்டனையை தருவார். நம்ப பாவங்களை அறிக்கை செய்வது மட்டுமல்லாமல் அவற்றை விலக்க வேண்டும். அவர் வெறுக்கும் காரியங்களை ஒருபோதும் செய்ய கூடாது. அவர் கட்டளைகளுக்கு விரோதமான காரியங்களை ஒருபோதும் செய்ய கூடாது. அவருக்கே நம் வாழ்வின் எல்லாவற்றிலும் முதலிடம் கொடுக்க வேண்டும். அவரைவிட வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடாது. நாம் இவ்வாறு செய்யும் போது கர்த்தர் நம் பாவங்களை மன்னிப்பார். நம்மேல் மனதுருகி பரிசுத்தத்தினால் நம்மை நிரப்புவார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரிடமாக மனந்திரும்ப ஜெபிப்போம்.