இன்றைய வார்த்தை:
22.02.2024 / வியாழன் 
வசனம்:
‭‭நியாயாதிபதிகள் 7:16 
"அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து, நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்."
 
செய்தி:
            கர்த்தர் கிதியோனுக்கு எக்காளத்தினாலும் மண்பானையினாலும் தீவட்டியினாலும் வெற்றியை கொடுத்தார். இவை ஒவ்வொன்றுக்கு பின்னும் ஆழ்ந்த சத்தியம் உள்ளது. கர்த்தர் நமக்கு வெற்றி தர வேண்டுமானால் நாமும் அவற்றை பண்ண வேண்டும். கர்த்தர் நமக்காக யுத்தம் செய்ய வேண்டுமானால் நாமும் இந்த காரியங்களை செய்ய வேண்டும். எக்காளமானது துதிக்கு சமானமாக இருக்கிறது. கர்த்தரை துதிக்கும் பாடல் எப்போதும் நம் நாவில் இருக்க வேண்டும். துதியினால் சத்துரு நம்மை விட்டு விலகி போவான். துதியே நமக்கு வெற்றியை கொடுக்கும். துதியை நாம் கையில் எடுக்கும் போது சத்துரு பயந்து ஓடுவான். இரண்டாவது மண்பானையை உடைக்க வேண்டும். மண்பானையானது நம் மாம்சத்துக்கு சமானமாக இருக்கிறது. நம்முடைய மாம்சத்தின் கிரியைகளுக்கு நாம் துணை போக கூடாது. மாம்சத்தின் கிரியைகளை வெறுக்க வேண்டும். உலகத்தின் காரியங்களுக்கு விலக்கி நம்மை காத்து கொள்ள வேண்டும். நம் மாம்சம் என்னும் மண்பானையை உடைக்க வேண்டும். தீவட்டியானது நமக்குள் இருக்கும் தேவனின் வெளிச்சத்துக்கு சமானமாக இருக்கிறது. மண்பாண்டத்தை உடைத்தபோதே தீவட்டியின் வெளிச்சம் வெளிப்பட்டது. அதேபோல் நம் மாம்சத்தை வெறுத்தால் மட்டுமே நமக்குள் இருக்கும் தேவனின் ஒளியானது பிரகாசிக்கும். இவற்றை நாம் செய்யும்போது கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் தங்கள் மாம்சத்துக்கு செவிகொடாமல் ஆவிக்கு செவி கொடுக்க ஜெபிப்போம்.