இன்றைய வார்த்தை:
21.02.2024 / புதன் 
வசனம்:
நியாயாதிபதிகள் 6:23-24 
"அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது."
செய்தி:
               கர்த்தர் நம் தேவன். அவரே நமக்கு சமாதானத்தை கொடுப்பவர். அவருடைய சமாதானம் நித்தியமானது. அவருடைய சமாதானம் அழியாதது. அவர் கொடுக்கும் சமாதானத்தை யாராலும் நம்மிடம் இருந்து பறிக்க இயலாது. அவர் நமக்கு சமாதானத்தை கொடுத்து விட்டால் நம் பயங்கள் நீங்கும். நம் துக்கங்கள் மாறும். நம் சூழ்நிலைகள் மாறும். நம் வாழ்க்கை ஒளி பெறும். அவருடைய சமாதானம் நமக்குள் இருக்கும் போது சந்தோஷம் இருக்கும். நம் வாழ்வில் பதுமை உண்டாகும். அவர் நம்முடன் இருக்கும் போது நமக்கு அந்த சமாதானம் கிடைக்கும். தம்மை விசுவாசிக்கும் அனைவருக்கும் அந்த சமாதானத்தை கொடுக்கிறார். இவ்வுலகம் கொடுக்கும் சமாதானம் நிலையானது அல்ல. அது மாயையான சமாதானம். கர்த்தரிடமிருந்து பெறுகிற சமாதானமே என்றும் அழியாதிருக்கும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரின் சமாதானத்தை பெற்றுக் கொள்ள  ஜெபிப்போம்.