இன்றைய வார்த்தை:
19.02.2024 / திங்கள் 
வசனம்:
நியாயாதிபதிகள் 5:31 
"கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது."
 
செய்தி:
            நாம் கர்த்தரை நேசிக்க வேண்டும். அவரில் முழு இதயத்தோடு அன்புகூற வேண்டும். நம் முழு இதயத்தோடும் முழு பெலத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவரை நேசிக்க வேண்டும். உண்மையாய் அவரை ஆராதிக்க வேண்டும். அவரை நாம் விசுவாசிக்கும் போது அவர் நம்மை வல்லமையுள்ளவர்களாக மாற்றுவார். நம்மை சூரியனை போல எழும்பி பிரகாசிக்க பண்ணுவார். பலருடைய வாழ்வில் இருளை நீக்கும் வெளிச்சமாக நம்மை மாற்றுவார். அவரை நேசிப்பவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. அவரை நாம் நேசிக்கும் போது அவர் நமக்கு விசேஷித்த ஆசீர்வாதங்களை அளிப்பார். அவரை பகைக்கிறவர்களையும் அவர் நேசிக்கிறார். கிருபையாய் அவர்களிடமும் இரங்குகிறார். அவர்களையும் இரட்சிக்க அவர் விரும்புகிறார். அவர்கள் தங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்பி வாழும்போது கர்த்தர் அவர்களையும் இரட்சித்து நேசிக்கிறார்.
 
ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரில் அன்புகூற ஜெபிப்போம்.