இன்றைய வார்த்தை:
18.02.2024 / ஞாயிறு
வசனம்:
நியாயாதிபதிகள் 5:3
"ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன்."
 
செய்தி:
             கர்த்தர் நம் தேவன். அவர் நமக்கு செய்த நன்மைகள் ஏராளம். அவர் நமக்கு பாராட்டின கிருபைகள் ஏராளம். அவர் நம் வாழ்வில் அளவற்ற அற்புதங்களை செய்துள்ளார். அவற்றை நினைத்து பாடினால் நம் நாவுகள் போதாது. அவற்றை நினைத்து பாட நம் ஆயுள் போதாது. அவரை என்றும் துதித்து கொண்டே இருக்க வேண்டும். அவர் நம்மை நடத்திடும் விதங்களை நினைத்து அவரை பாட வேண்டும். அவர் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து துதிக்க வேண்டும். அவரை உயர்த்தும் துதிப் பாடல் நம் நாவில் இருக்க வேண்டும். நம்முடைய துன்பத்திலும் அவர் கிருபைகளை நினைத்து பாட வேண்டும். நம் இக்கட்டுகளிலும் அவருடைய தயவை போற்றி பாட வேண்டும். நம் உணர்விலும் அவருக்கு மகிமை செலுத்த வேண்டும். நம் தாழ்விலும் அவருக்கு துதியை செலுத்த வேண்டும். கர்த்தரை நாம் துதித்து பாடும்போது அவர் நமக்காக செயல்படுவார். நமக்காக யாவையும் செய்வார். வாக்குத்தத்தங்களை நம் வாழ்வில் நிறைவேறப் பண்ணுவார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரை என்றும் துதித்து பாட ஜெபிப்போம்.