இன்றைய வார்த்தை:
14.02.2024 / புதன் 
வசனம்:
ஏசாயா 66:2 
"என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்."
 
செய்தி:
             நாம் கர்த்தருக்கு பயந்து வாழ வேண்டும். அவருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து அதன்படி நடக்க வேண்டும். அவருடைய வார்த்தையை ஒருபோதும் அசட்டை பண்ண கூடாது. அவருடைய வார்த்தையை விட்டு ஒருபோதும் விலக கூடாது. அவருடைய வசனத்துக்கு பயப்பட வேண்டும். அவருடைய வார்த்தைக்கு பயந்து பாவத்தை விட்டு விலக வேண்டும். அவருடைய வார்த்தையை கேளாமல் நாம் பாவம் செய்யும் போது பல இன்னல்களுக்கு உள்ளாகிறோம். அவருடைய வார்த்தைக்கு பயந்து அதை நாம் பின்பற்றும் போது அவருடைய கண்கள் நம்மேல் நோக்கமாய் இருக்கின்றன. அவருடைய செவிகள் நம்முடைய ஜெபத்துக்கு திறந்தனவையாக இருக்கின்றன. நாம் நம்மை கர்த்தருக்கு முன் தாழ்த்தும் போது அவர் நம்மை உயர்த்துவார். 

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அதன்படி நடக்க ஜெபிப்போம்.