இன்றைய வார்த்தை:
11.02.2024 / ஞாயிறு
வசனம்:
ஏசாயா‬ ‭63:16‬ 
"தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்."
 
செய்தி:
            கர்த்தரே நம் பிதாவாக இருக்கிறார். நம்மை அனுதினமும் காக்கும் நல்ல தகப்பன் அவரே. நம்மை எல்லா தீங்குக்கும் விலக்கி மீட்பவர் அவரே. நம்மை ஒரு குறைவுமின்றி நிறைவாய் நடத்தும் நல்ல தேவன் அவரே. ஆபத்தில் நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்று நம்மை தைரியப்படுததுபவர் அவரே. நம்மை தோளில் தூக்கி சுமந்து நம் பாதம் கல்லில் இடறாதபடி காப்பவர் அவரே. பொல்லாதவர்களாகிய இவ்வுலக மனிதர்களே தங்கள் பிள்ளைகளுக்கு அப்பத்தை கேட்டால் கல்லையும், மீனை கேட்டால் பாம்பையும், முட்டையை கேட்டால் தேளையும் கொடுக்க மாட்டார்கள். அப்படியானால் நம் பரம பிதாவாக இருக்கிற சர்வ வல்ல தேவன் நம்மை போஷிப்பது அதிக நிச்சயம். அவர் நம்மை நேர்த்தியாய் நடத்தி செல்வார். பூர்வகால முதல் அவர் நம் தகப்பனாக இருக்கிறார். நம்மை இரட்சித்து மீட்டு பரிசுத்தமாக வாழ உதவுகிறார். அந்த தேவனுக்காக நாம் நம் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும். நம் தகப்பனின் நாமத்தை நாம் நம் வாழ்க்கையின் மூலம் மகிமைப்படுத்த வேண்டும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் தங்கள் தகப்பனாகிய தேவனை விசுவாசிக்க  ஜெபிப்போம்.