இன்றைய வார்த்தை:
09.01.2024 / செவ்வாய் 
வசனம்:
ஏசாயா‬ ‭41:10‬ ‭
"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்."
 
செய்தி:
              கர்த்தர் நம்மை நேசிக்கிற தேவன். அவர் நம்முடன் இருந்து நமக்காக யாவையும் செய்கிறார். அவர் நல்ல சூழ்நிலைகளில் மட்டும் நம்முடன் இருக்கிறவர் அல்ல. சூழ்நிலைகளை கண்டு நம்மைவிட்டு விலகுகிறவர் அல்ல. எந்த நிலையிலும் அவர் நம்முடன் இருப்பார். ஒருபோதும் விலகாமல் நம்மை காப்பார். நம் கால்கள் வழுவாதபடி நம்மை காத்துக் கொள்வார். அவர் நம் தேவனான படியால் நாம் எதைகுறித்து பயப்பட வேண்டாம். நம்முடன் இருந்து நம் வாழ்வின் துக்கங்களை மாற்றுவார். நம்மை பெலப்படுத்தி நமக்கு சகாயம் பண்ணுவார். நம் மன குழப்பங்களை மாற்றி நமக்கு சமாதானத்தை தருவார். நம்மை குறித்த திட்டத்தை அவர் ஏற்கனவே வரைந்து விட்டார். அவரை விசுவாசிக்கும் போது அந்த திட்டத்தின் படி நடக்க நமக்கு உதவுவார். நம் பாதையில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை மேற்கொள்ள உதவுவார். தமது வலது கரத்தால் தாங்கி நம்மை நேர்த்தியாய் நடத்துவார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரை நம்பி பயப்படாதிருக்க ஜெபிப்போம்.