இன்றைய வார்த்தை:
08.01.2024 / திங்கள் 
வசனம்:
ஏசாயா‬ ‭40:31‬ 
"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்."
 
செய்தி:
           நாம் கர்த்தருக்கு விசுவாசத்துடன் காத்திருக்க வேண்டும். அவருக்கு காத்திருக்கிற ஒருவரையும் அவர் கைவிடார். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களை அவர் உயர்த்துவார். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் புதுபெலன் அடைவார்கள். கர்த்தரே அவர்களை மகிமையடைய பண்ணுவார். கர்த்தரே அவர்களுக்கு துணையாய் இருப்பார். கர்த்தர் தமது ஆசீர்வாதங்களால் அவர்களை நிரப்புவார். கர்த்தர் அவர்களை கழுகுகளை போல செட்டைகளை அடித்து உயரே எழும்ப பண்ணுவார். நம் பெலவீனங்களை மாற்றி நம்மை பெலப்படுத்துவார். நாம் சோராமல் திடமனதாக இருக்க உதவுவார். நாம் இளைப்படையாமல் அவருக்காக ஓட உதவி செய்வார். 

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தருக்கு காத்திருந்து பெலனடைய ஜெபிப்போம்.