07.01.2024 / ஞாயிறு
வசனம்:
ஏசாயா 40:11
"மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்."
செய்தி:
கர்த்தராகிய இயேசுவே நம் நல்ல மேய்ப்பர். அவர் தமது மந்தையாகிய நம்மை நல்வழியில் நித்தமும் நடத்துகிறார். நாம் நடக்க வேண்டிய பாதையில் நம்மை வழிநடத்துகிறார். நாம் அவரை விட்டு தூரமாக செல்லும்போது அவர் நம்மை தேடி வந்து அணைத்து நம்மை சேர்த்து கொள்ளுகிறார். மேய்ப்பன் தன் ஆடுகளை அளவில்லாமல் நேசிப்பது போல நம்மை நேசிக்கிறார். நாம் சேற்றில் விழும் நேரங்களில் நம்மை அதிலிருந்து தூக்கிவிட்டு நம்மை சுத்திகரிக்கிறார். நாம் குழியில் விழும்போது நம்மை மீண்டும் தாக்கி நிறுத்தி நிலைநிறுத்துகிறார். நாம் முட்களின் நடுவே சிக்கியிருக்கும் நேரங்களில் நம்மை விடுவித்து நமக்கு சந்தோஷத்தை தருகிறார். நம் நெருக்கத்தை மாற்றி நம்மை விசாலங்களில் வைக்கிறார். சத்துருவின் கைகளுக்கு நம்மை விலக்கி காக்கிறார். நம்மை தம்முடைய ராஜ்யத்தில் சேர்த்து கொள்ளும் வரை எத்தீங்கும் அணுகாமல் சுகமாக காத்து கொள்வார். அவரை விசுவாசித்து அவருக்கு பின் செல்லும் ஆடாக அவர் மந்தையில் நாம் இணைய வேண்டும்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தர் காண்பிக்கும் வழியில் நடக்க ஜெபிப்போம்.

0 Comments