இன்றைய வார்த்தை:
06.01.2023 / சனி 
வசனம்:
‭‭ஏசாயா‬ ‭38:15‬ ‭
"நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்."
 
செய்தி:
             கர்த்தர் நமக்கு வாக்குத்தத்தங்களை கொடுக்கும் தேவன். அவர் வாக்குத்தத்தங்களை நமக்கு கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். வாக்கு பண்ணினவர் மாறிடார். வாக்குத்தத்தங்களை நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் பல வாக்குகளை நமக்கு நிறைவேற்றி இருக்கிறார். இனியும் நமக்கு ‌நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் வாக்கு பண்ணினால் அதிலிருந்து மாற மாட்டார். அவர் மனம்மாற மனிதன் அல்ல. அவர் பிறரை போல பொய் சொல்லுவதில்லை. தாம் சொன்ன வாக்கை காப்பாற்றுகிறார். அவர் சிறந்ததை நமக்கு தருவார். ஆகவே அவர் கொடுத்த வாக்கு நிறைவேறும் வரை விசுவாசத்தோடு காத்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். அதை எப்போது நிறைவேற்றினால் நமக்கு நல்லதாக அமையும் என்பதை அவர் அறிவார். அந்த சமயத்தில் நமக்காக வாக்குப்பண்ணினதை நிச்சயம் நிறைவேற்றுவார். 

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தருடைய வாக்கை நம்பி காத்திருக்க ஜெபிப்போம்.