இன்றைய வார்த்தை:
05.01.2024 / வெள்ளி 
வசனம்:
ஏசாயா‬ ‭38:17‬ ‭
"இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்."
 
செய்தி:
                நம் வாழ்வில் பல நேரங்களில் சமாதானத்துக்கு பதிலாக கசப்புகள் நேரிடலாம். சந்தோஷத்துக்கு பதிலாக மனசோகங்கள் நேரிடலாம். இன்பங்களுக்கு பதிலாக துன்பங்கள் நேரிடலாம். ஆனாலும் அந்த சூழ்நிலைகள் எல்லாவற்றிலும் நம்மை நேசிப்பவர் கர்த்தராகிய அவர் ஒருவரே. நம்மை எல்லா சூழ்நிலைகளினின்றும் விடுவிப்பவர் அவரே. அந்த சூழ்நிலைகள் அனைத்தையும் கடந்து செல்ல நமக்கு பெலன் தருபவர் அவரே. அவர் எல்லா அழிவுக்கும் விலக்கி நம்மை காப்பார். நம் பாவங்களை மன்னித்து நம்மை இரட்சிக்கிறார். பரிசுத்தமாக வாழ நமக்கு உதவுகிறார். மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள தூரமாக நம் பாவங்களை நம்மைவிட்டு நீக்குகிறார். அவருடைய இரத்தமே நம் பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரிக்கிறது. ஆகவே அவரை நாம் முழு உள்ளத்தோடு விசுவாசித்து நம் பாவங்களை அறிக்கையிட வேண்டும். அப்போது அவர் நம்மை மீட்டு நமக்கு விடுதலையை தருவார். 

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரை விசுவாசித்து தங்கள் பாவங்களில் இருந்து மீட்கப்பட ஜெபிப்போம்.