இன்றைய வார்த்தை:
04.01.2024 / வியாழன் 
வசனம்:
ஏசாயா‬ ‭37:16‬ ‭
"சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்."
 
செய்தி:
               கர்த்தராகிய இயேசுவே எல்லாவற்றிலும் மேலானவர். அவரே சகலத்தையும் உண்டாக்கினவர். அவரே பூமியின் ராஜாக்களை விட உயர்ந்தவர். பூமியை ஆள்கிறவர்கள் அவர் கரத்தில் உள்ளார்கள். அவர்களுடைய இதயங்களை அவர் நீர்க்கால்களை போல திருப்புகிறார். எல்லா ராஜ்யங்களுக்கும் அவரே தேவன். அவரே சகலத்தையும் உயர்ந்தவர். இவ்வளவு உயர்ந்த தேவன் நமக்கும் நம்முடைய தேவனாக இருக்கிறார். அவர் நமது தகப்பனாக இருக்கிறார். நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறார். சகலத்தையும் உருவாக்கின வல்லமையுள்ள தேவன் நம் வாழ்விலும் வல்லமையான காரியங்களை செய்கிறார். ஆகவே நாம் பரிசுத்தமாக அவர் சித்தத்தை நிறைவேற்றி வாழும்போது அவர் நம் வாழ்வில் அதிசயங்களையும் அற்புதங்களையும் நமக்காக செய்கிறார். நம் ஒரே நோக்கம் பரிசுத்தமாக வாழ்வதாக மட்டுமே இருக்க வேண்டும். நம் வாழ்வு அவருக்கு பிரியமானதாக இருக்க வேண்டும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் சகலத்தையும் உண்டாக்கிய கர்த்தரை விசுவாசிக்க  ஜெபிப்போம்.