03.01.2024 / புதன்
வசனம்:
ஏசாயா 35:3
"தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்."
செய்தி:
நாம் கர்த்தருடைய சமூகத்தில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். அவருடைய பாதத்தில் நித்தமும் அமர்ந்திருக்க வேண்டும். நம் ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டும். நம் முழங்கால்களை பலப்படுத்த வேண்டும். நம் வாழ்வில் நாம் செழித்திருக்க நம் ஜெபம் உறுதியானதாக இருக்க வேண்டும். நம் வாழ்வு பரிசுத்தமானதாக இருக்க வேண்டுமானால் நம் ஜெபம் வல்லமையுள்ளதாக இருக்க வேண்டும். அவருடைய பாதத்தில் நாம் காத்திருந்து ஜெபித்தால் மட்டுமே அவருடனான உறவு நிலைத்திருக்கும். அவருடனான உறவு அனுதினமும் பெருக வேண்டும். அனுதினமும் பலப்பட வேண்டும். அவருடனான நம் உறவு நிலைத்திருந்தால் மட்டுமே நம்மால் பாவங்களை விட்டு விலக முடியும். நாம் பரிசுத்தமாக வாழ அவருடைய துணை நமக்கு நிச்சயம் தேவை. நம்முடைய முழங்கால்கள் ஜெபத்தில் பலப்பட வேண்டும். அப்போதே நம் ஆவிக்குரிய வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படும்.
ஜெபம்:
அனைத்து மக்களும் தங்கள் முழங்கால்களை பலப்படுத்த ஜெபிப்போம்.

0 Comments