இன்றைய வார்த்தை:
29.01.2024 / திங்கள் 
வசனம்:
ஏசாயா‬ ‭54:10‬ ‭
"மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்."
 
செய்தி:
               கர்த்தர் நம்மேல் கிருபை நிறைந்தவர். தமது கிருபையால் நமக்கு இரங்குகிறார். மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் அவருடைய கிருபை நம்மைவிட்டு விலகாது. அவருடைய கிருபை நிலையானது. அவருடைய கிருபை மகத்தானது. அவருடைய கிருபை என்றும் உள்ளது. அவருடைய தயவு தலைமுறை தலைமுறைக்கும் நிலை நிற்கும். அவருடைய கிருபை மாறாதது. அவருடைய கிருபையினால் மட்டுமே நாம் நிலைநிற்கிறோம். அவருடைய தயவினால் மட்டுமே நாம் உயிர் வாழ்கிறோம். அவருடைய கிருபையினாலேயே நாம் இரட்சிக்கப்பட்டோம். அவருடைய தயவினால் மட்டுமே நம் பாவங்கள் கழுவப்பட்டன. அந்த கிருபையை நினைத்து நாம் அனுதினமும் பாட வேண்டும். அந்த கிருபையை நினைத்து அனுதினமும் அவரை மகிமைப்படுத்த வேண்டும். அவருக்கு நன்றிகளை செலுத்த வேண்டும். அவருக்காக வாழ வேண்டும்.எந்த சூழ்நிலையிலும் அவருடைய கிருபை நம்மைவிட்டு விலகாது. 

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தருடைய கிருபையை பெற்றுக் கொள்ள ஜெபிப்போம்.