இன்றைய வார்த்தை:
28.01.2024 / ஞாயிறு
வசனம்:
‭‭ஏசாயா‬ ‭54:7‬ ‭
"இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்."
 
செய்தி:
            கர்த்தர் சில நேரங்களில் நம்மை கைவிட்டது போல தெரியலாம். ஆனால் அவர் நம்மேல் நோக்கமாய் இருக்கிறார். நம்மை கண்காணித்து கொண்டே இருக்கிறார். நம்மை விட்டு விலகாமல் கைவிடாமல் நம்மை நடத்துகிறார். நம் நினைவுகளை அவர் அறிவார். அவர் நம்மைவிட்டு அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் அவர் நம்மைவிட்டு விலகவில்லை. ஆபிரகாம் ஈசாக்கை பலியிட செல்லும் போது அவர் காணாதவர் போல இருந்தாலும் ஈசாக்குக்கு மறுவாழ்வளித்தார். சிலநேரங்களில் நம் விசுவாசத்தை சோதிப்பதற்காக நம்மை காணாதவர் போல இருப்பார். அதில் நாம் வெற்றி பெறும் போது நமக்கு அதற்கேற்ற ஆசீர்வாதங்களை தருவார்‌. அந்த சூழ்நிலையில் நாம் நம் சொந்த முயற்சியை நம்பி இராமல் கர்த்தரையே நோக்கி பார்க்க வேண்டும். அவர் தம்முடைய உருக்கமான இரக்கங்களால் நம்மை சேர்த்து கொள்வார். நம்மை இமைப்பொழுதும் கைவிட்டாலும் எத்தீங்கும் நம்மை அணுகாமல் காத்து கொள்வார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தருடைய இரக்கத்தை பெற்று கொள்ள  ஜெபிப்போம்.