இன்றைய வார்த்தை:
27.01.2024 / சனி 
வசனம்:
ஏசாயா‬ ‭53:10‬ ‭
"கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்."
 
செய்தி:
            நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். அவர் பிள்ளைகளாகிய நாம் நம் தகப்பனின் சித்தத்தை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். அவருக்கு பிரியமானதை செய்து அவரை மகிழ்விக்க வேண்டும். அவர் நாமத்தை உயர்த்த வேண்டும். அவருக்கு சித்தமல்லாத காரியங்களை நாம் செய்யும்போது கர்த்தர் நம்மை முற்றிலுமாக கைவிடமாட்டார். அவர் மிகுந்த கிருபையுள்ள தேவன். நம்மேல் அளவற்ற இரக்கம் கொண்டிருக்கிறார். ஆகவே அவருக்கு பிரியமல்லாத காரியத்தை நாம் செய்யும்போது கூட தமது கிருபையால் நமக்கு இரங்குவார். அந்த பாதையிலும் நம்மை நடக்க செய்வார். ஆனால் அதினால் பயன் ஏதுமில்லை. ஆனால் அவருடைய சித்தத்தின்படி நாம் நடக்கும்போது அவர் ஒவ்வொரு நிலையிலும் நாம் செல்வதற்கேற்ற வழியை நமக்கு காண்பிப்பார். அவருடைய சித்தத்தை நிறைவேற்றும் போது அது நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை கொடுக்கும். அவருடைய சித்தத்தின்படி நாம் நடக்கும்போது நம் வாழ்வில் துன்பங்கள் வராதபடி அவர் உதவி செய்வார். துன்பங்கள் வந்தாலும் அவற்றை எளிதாக மேற்கொள்ள நமக்கு உதவி செய்வார். கர்த்தருக்கு சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை கர்த்தர் முன் நின்று அகற்றுவார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்ற ஜெபிப்போம்.