இன்றைய வார்த்தை:
26.01.2024 / வெள்ளி 
வசனம்:
ஏசாயா‬ ‭52:12
"நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்."
 
செய்தி:
            நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக இருக்கிறோம். நம்முடைய சுய விருப்பத்தின் படி நாம் செல்ல கூடாது. நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவர் விருப்பத்தின்படியே இருக்க வேண்டும். நம் மனதில் தோன்றுகிற வழியில் நாம் செல்ல கூடாது. கர்த்தரை நம் முன்னே செல்ல அனுமதிக்க வேண்டும். அவர் பின் நாம் பொறுமையுடன் செல்ல வேண்டும். அவர் காட்டும் வழியில் விசுவாசத்தோடு செல்ல வேண்டும். அவர் காட்டும் வழி சுலபமான வழியாக இருக்காது. பல துன்பங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் அவற்றை மேற்கொள்ள அவர் நமக்கு உதவுவார். அந்த பாதையில் முன்னேறி செல்ல நமக்கு உதவி செய்வார். அவர் என்றும் நமக்கு முன் சென்று நம் தடைகள் அனைத்தையும் அகற்றுவார். நமக்கு பின் நம்மை எத்தீங்கும் அணுகாமல் காப்பார். ஆகவே நமக்கு பிடித்த வழியில் நாம் செல்லாமல் நமக்கு முன்சென்று நம்மை வழிநடததும் கர்த்தரை பின்பற்றி நடக்க வேண்டும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரின் பின் பொறுமையுடன் செல்ல ஜெபிப்போம்.