25.01.2024 / வியாழன்
வசனம்:
ஏசாயா 51:11
"அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்."
செய்தி:
நாம் கர்த்தரால் மீட்கப்பட்டிருக்கிறோம். அவர் தமது இரத்தத்தை சிந்தி நம்மை மீட்டுக் கொண்டார். நம்முடைய பாவங்களை கழுவி நம்மை இரட்சித்தார். அவருடைய மீட்பை எண்ணி நாம் சந்தோஷப்பட வேண்டும். அவருடைய இரட்சிப்பில் களிகூர வேண்டும். அவர் கொடுக்கும் மகிழ்ச்சியே நித்தியமானது. அவரால் கிடைக்கும் சந்தோஷமே நிலையானது. ஆகவே அழியாதது. கர்த்தரால் மீட்கப்பட்டால் நமக்கு இரட்சிப்பின் சந்தோஷத்தை அவர் தருவார். சஞ்சலங்களும் வருத்தங்களும் நம்மை விட்டு நீங்கி போகும். கவலைகள் நம்மைவிட்டு மாறும். நம் சூழ்நிலைகள் நமக்கு சாதகமானதாக இல்லாவிட்டால் நாம் சந்தோஷமாக இருப்போம். நாம் துன்பத்தின் பாதையில் சென்றாலும் நாம் மகிழ்ச்சியாய் தேவனை தேடுவோம். அந்த சந்தோஷத்தை தரும் தேவனை நாம் உறுதியாக விசுவாசித்து அவருக்கு பிரியமாக வாழ வேண்டும்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தரால் வரும் மகிழ்ச்சியை பெற்றுக் கொள்ள ஜெபிப்போம்.

0 Comments