இன்றைய வார்த்தை:
23.01.2024 / செவ்வாய் 
வசனம்:
ஏசாயா‬ ‭50:4‬ ‭
"இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்."
 
செய்தி:
            கர்த்தரே நமக்கு ஞானத்தை தருபவர். அவரே ஞானத்தின் ஊற்று. அவரையன்றி வேறு யாரிடத்திலும் ஞானத்தை பெற்றுக் கொள்ள முடியாது. அவரே ஞானத்தை அருள்பவர். அவரிடம் உண்மையாய் கேட்கும் யாவருக்கும் அவர் ஞானத்தை அருள்கிறார். அவரே அறிவையும் புத்தியையும் கொடுக்கும் தேவன். நம்முடைய ஞானத்தினால் பிறரை தேற்ற வேண்டும்.‌ பிறருக்கு தேவனுடைய வார்த்தையினால் நாம் ஆறுதலை கொடுக்க வேண்டும். அவருடைய வார்த்தையை சமயத்திற்கேற்ப நாம் பயன்படுத்தி பிறரை தேற்ற வேண்டும். சமயத்திற்கேற்ப அவருடைய வார்த்தையை பயன்படுத்த தேவனுடைய ஞானம் நமக்கு தேவை. அவரிடம் கேட்டு அவருடைய ஞானத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஞானம் நாம் எப்படி பேச வேண்டும் என்று நமக்கு போதிக்கும். நாம் என்னென்ன வார்த்தைகளை எப்போது பயன்படுத்த வேண்டும் என்று நமக்கு வெளிப்படுத்தும். ஆகவே தேவனுடைய ஞானத்தால் நாம் நிரம்ப வேண்டும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தருடைய ஞானத்தை பெற்றுக் கொள்ள  ஜெபிப்போம்.