22.01.2024 / திங்கள்
வசனம்:
ஏசாயா 49:16
"இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது."
செய்தி:
கர்த்தர் நம் தேவன். அவர் நம்மை என்றும் காண்கிறார். அவர் நம்மை என்றும் காக்கிறார். அவர் நம் தேவைகளை எல்லாம் பார்த்து கொள்வார். அவர் நம் தேவைகளை அறிவார். நம் மனதை அவர் அறிவார். நம் சிந்தனைகள் அனைத்தும் அவருக்கு மறைவானதல்ல. நம்மை குறித்த திட்டத்தை அவர் தமது உள்ளங்கையில் வரைந்து விட்டார். நாம் எப்படி இருக்க வேண்டும், நமக்கு என்னென்ன ஆசீர்வாதங்களை கொடுக்க வேண்டும் என அனைத்தையும் அவர் முன்குறித்து விட்டார். அவரை விசுவாசிக்கும் போது அந்த வழியில் நம்மை நடத்தி செல்வார். ஆகவே நாம் எதைக் குறித்தும் கவலைப்படாமல் அவரை தேடுவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். நாளுக்கு நாள் அவருக்குள் வளர்வதில் மட்டுமே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தரை விசுவாசித்து அவர்களுக்காக வைத்திருக்கும் பாதையில் செல்ல ஜெபிப்போம்.

0 Comments