21.01.2024 / ஞாயிறு
வசனம்:
ஏசாயா 49:5
"யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத்தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்."
செய்தி:
கர்த்தரே நம் பெலன். அவரே நம் அரண். அவரே நம் அடைக்கலமானவர். ஆபத்து காலத்தில் அவரே நம் துணை. அவரே நம்மை காக்கும் கன்மலை. நம் பெலவீனங்களை மாற்றுபவர் அவரே. நம் சோர்வுகளில் நமக்கு பெலனாக இருப்பவர் அவரே. நம்முடைய ஆபத்துகளிலும் சோதனைகளிலும் நம்முடன் இருப்பவர் அவரே. நம் இக்கட்டுகளில் நம்மை காப்பவர் அவரே. நம் சோதனைகளை கடந்து செல்ல பெலன் கொடுப்பவர் அவரே. அவரையே நாம் எப்போதும் சார்ந்திருக்க வேண்டும். அவரையே எப்போதும் உறுதியாக பற்றி கொண்டிருக்க வேண்டும். அவர் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நம் பெலனாக இருப்பார். நமக்காக யாவையும் செய்வார். நம்மை விட்டு விலகாமல் நம்மை காப்பார்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தரை தங்கள் பெலனாக கொண்டிருக்க ஜெபிப்போம்.

0 Comments