20.01.2024 / சனி
வசனம்:
ஏசாயா 48:21
"அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது."
செய்தி:
நாம் கர்த்தரை உறுதியாக விசுவாசிக்க வேண்டும். அவரை விசுவாசிக்கும் போது அவர் நமக்காக அற்புதங்களை செய்வார். அவரை நம்புகிற ஒருவரையும் அவர் விழுந்து போக விடுவதில்லை. கர்த்தர் இஸ்ரவேலரை வனாந்தரத்தில் வழிநடத்தின போது அவர்களை நடத்தி செல்ல அவர் மறக்கவில்லை. அவர்களை போஷிக்க அவர் மறக்கவில்லை. அவர்கள் விருப்பங்களை நிறைவேற்ற அவர் மறக்கவில்லை. அவர்களை சுகத்தோடு காக்க அவர் மறக்கவில்லை. அவர்களுடைய தாகத்தை தீர்க்க அவர் மறக்கவில்லை. அவர் இரவும் பகலும் அவர்களை வழிநடத்தினார். மன்னாவினாலும் காடையினாலும் அவர்களை அனுதினமும் போஷித்தார். செங்கடலை பிளந்து அவர்களை வழிநடத்தினார். கன்மலையை பிளந்து அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார். ஒருபோதும் அவர்களை தாகமாக இருக்க விடவில்லை. ஆகவே நாம் அவரை விசுவாசிக்கும் போது அவர் நமக்காக எதையும் செய்வார். நமக்காக எல்லா அற்புதங்களை செய்வார்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தரை விசுவாசித்து அற்புதங்களை பெற்று கொள்ள ஜெபிப்போம்.

0 Comments