02.01.2024 / செவ்வாய்
வசனம்:
ஏசாயா 34:16
"கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்."
செய்தி:
நாம் கர்த்தருடைய வசனத்தை அனுதினமும் மறவாமல் வாசிக்க வேண்டும். அவருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாய் இருக்க வேண்டும். அவருடைய வேதத்தின் ஆழங்களை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அவருடைய வேதத்தில் அனுதினமும் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். அவருடைய வேதத்தை ஆழமாக தியானிக்க வேண்டும். அவருடைய வேதத்தில் அனுதினமும் தேடி வாசிக்க வேண்டும். அவருடைய வார்த்தையை மட்டுமே ஆர்வத்துடன் கேட்க வேண்டும். அவருடைய வார்த்தையை கேட்பது மட்டுமல்லாமல் அதன்படி நடக்க வேண்டும். அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அதனை பின்பற்ற வேண்டும். அவருடைய வார்த்தையை தியானித்து அதை நம் வாழ்வில் உபயோக படுத்த வேண்டும். நாம் கேட்கும் வார்த்தை நம் இதயத்தில் கிரியை செய்ய வேண்டும். அது நம் பாவங்களை நீக்கி நம்மை பரிசுத்தப்படுத்த வேண்டும்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தருடைய வேதத்தை வாசிக்க ஜெபிப்போம்.

0 Comments