இன்றைய வார்த்தை:
19.01.2024 / வெள்ளி 
வசனம்:
‭‭ஏசாயா‬ ‭48:17‬ ‭
"இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே."
 
செய்தி:
            கர்த்தர் நம் தகப்பன். அவர் நம் ஆசிரியர். அவரே நமக்கு நல்லதை போதிப்பவர். நமக்கு என்ன வேண்டும் என்று அவர் அறிவார். நமக்கு நன்மையானது எதுவென்று அவர் அறிவார். பிரயோஜனமானதை நமக்கு போதிப்பார். அதனை அடையும்படி நமக்கு உதவுவார். அந்த வழியில் நம்மை நேர்த்தியாய் நடத்தி செல்வார். அவரை போல நம்மை போதித்து நடத்துபவர் யாரும் இல்லை. அவரை போல நம்மை தெரிந்தவர் வேறு யாருமில்லை. அவரை விசுவாசிக்கும் போது நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நல்ல முடிவை எடுக்க உதவி செய்வார். நடக்க வேண்டிய வழி இதுவே என்று காண்பித்து அதன்வழியாக நம்மை நடத்தி செல்லும் நல்ல தேவன் அவரே. அவரை நாம் விசுவாசித்து அவர் சொற்படி நடக்க வேண்டும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தர் போதிக்கும் பாதையில் நடக்க ஜெபிப்போம்.