18.01.2024 / வியாழன்
வசனம்:
ஏசாயா 46:3
"யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்."
செய்தி:
கர்த்தர் நம்மை ஆதி முதற்கொண்டே அறிந்திருக்கிறார். அவர் நம்மை பற்றி அனைத்தையும் அறிந்திருக்கிறார். அவர் நம்மை எப்போதும் காண்கிறார். அவர் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை. ஒருநாளும் நம்மை விட்டு அவர் தமது கிருபையை விலக்குவதில்லை. நாம் தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதற்கொண்டு நம்மை ஏந்துகிறார். நம்மை குறித்த அவர் திட்டங்களை தமது உள்ளங்கையில் வரைந்திருக்கிறார். நம்மை தாயின் வயிற்றில் உருவாக்கும் முன்னே நம்மை தமக்காய் தெரிந்து கொண்டார். நாம் ஒரு ஜீவனாக உருவானது முதல் நம்மை தாங்கினார். நம்மை இதுவரை அற்புதமாய் நடத்தினார். நம் தேவைகள் அனைத்தையும் சந்தித்து நம்மை போஷித்தார். அவரை உறுதியாக பற்றிக்கொள்ளும்போது இனியும் நம்மை நடத்துவார், தாங்குவார், ஏந்துவார். நம்மை இறுதிவரை நல்ல தகப்பனை போல சுமந்து செல்வார்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தரையே எப்போதும் நம்பியிருக்க ஜெபிப்போம்.

0 Comments