இன்றைய வார்த்தை:
17.01.2024 / புதன் 
வசனம்:
ஏசாயா‬ ‭45:17‬ 
"இஸ்ரவேலோ, கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்."
 
செய்தி:
              நாம் கர்த்தரை உறுதியாக விசுவாசிக்க வேண்டும். அவர் பிள்ளைகளாக மாறி அவருக்காக வாழ வேண்டும். அவர் சித்தத்தை அறிந்து அதனை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். அவர் காட்டும் பாதையில் நம்பிக்கையுடன் செல்ல வேண்டும்.அவரை நம்பும் ஒருவரும் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதே இல்லை. கர்த்தர் தம்மை நம்புகிற அனைவரையும் நித்திய பாதையில் நடத்தி செல்கிறார். ஒரு தீங்கும் அணுகாமல் காக்கிறார்‌. அவரை நம்புகிற அனைவரையும் அவர் வெட்கப்பட்டு போக விடமாட்டார். கர்த்தரையே நம்பி இருக்கிற அனைவருக்கும் அவரே அடைக்கலமாக இருப்பார். அவரே பெலன் தந்து அவர்களை நடத்துவார். அவர்கள் பாதையில் என்ன துன்பங்கள் வந்தாலும் அவர் நித்தமும் அவர்களை தாங்கி நேர்த்தியாய் நடத்தி செல்வார். ஒருபோதும் கலங்காமலும் வெட்கப்படாமலும் இருக்க உதவி செய்வார். அவரை நம்புகிற ஒருவரையும் அவர் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரை நம்பி வெட்கப்படாதிருக்க ஜெபிப்போம்.