16.01.2024 / செவ்வாய்
வசனம்:
ஏசாயா 45:2
"நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்."
செய்தி:
கர்த்தர் நம் வாழ்வில் முன்னேற செல்ல நாம் அனுமதிக்க வேண்டும். அவருக்கு பின்னால் நாம் பொறுமையுடன் செல்ல வேண்டும். நம் மனதிற்கு பிரியமான வழியில் ஒருபோதும் செல்ல கூடாது. கர்த்தர் காண்பிக்கும் வழியில் செல்ல வேண்டும். நம் சுயவிருப்பத்தின்படி நாம் சென்றால் அது நம்மை ஆபத்துகளுக்கு நேராக அழைத்து செல்லும். நாம் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். ஆனால் கர்த்தரை நம் வாழ்வின் முன்னே செல்ல நாம் அனுமதித்தால் அவர் நாம் செல்ல வேண்டிய பாதையில் இருக்கும் பள்ளங்களை எல்லாம் நிரப்புவார். நமக்கு முன் கோணலாக இருக்கும் வழிகளை செவ்வையாக்குவார். நாம் செல்வதற்கேதுவான பாதையை நமக்கு உருவாக்கி தருவார். அவரை நாம் விசுவாசித்தால் அவருடைய தூதர்களை நம்மை காக்கும்படி கர்த்தர் அனுப்புவார். எப்போதும் நமக்கு முன்னே சென்று நாம் செல்ல வேண்டிய வழியை நமக்கு காண்பிப்பார்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தருக்கு பின்னால் பொறுமையுடன் செல்ல ஜெபிப்போம்.

0 Comments