15.01.2024 / திங்கள்
வசனம்:
ஏசாயா 44:21
"யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை."
செய்தி:
நாம் கர்த்தருடைய ஊழியர்கள். அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியார். அவர் நம்மை உலகத்தோற்றத்திற்கு முன்னே தெரிந்து கொண்டார். நாம் அவரை அறிவதற்கு முன்னரே அவர் நம்மை அறிந்தார். அவரே நம்மை உருவாக்கின சர்வ வல்ல தேவன். அவர் நம்மை நிச்சயம் காப்பார். நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். நாம் அவரை விட்டு விலகினாலும் அவர் நம்மைவிட்டு விலகாமல் நம்மை காத்து கொள்வார். அவருக்கு பிரியமாக வாழ நாம் முயற்சிக்க வேண்டும். அவர் ஒருபோதும் நம்மை மறந்து போவதில்லை. நம் தாழ்வில் அவர் நம்மை நினைவுகூர்ந்தார். இவ்வளவு இரக்கமுள்ள தேவனை நாம் ஒருபோதும் துக்கப்படுத்த கூடாது. பாவங்களை விட்டு விலகி அவருக்கு பிரியமாக வாழ வேண்டும். உயிருள்ள வரை அவரை உயர்த்த வேண்டும்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தரால் நினைக்கப்பட ஜெபிப்போம்.

0 Comments