14.01.2024 / ஞாயிறு
வசனம்:
ஏசாயா 44:3
"தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்."
செய்தி:
கர்த்தராகிய இயேசுவே நம்மை ஆசீர்வதிப்பவர். நாம் வனாந்திரமான வழியில் நடக்கும் போது நமக்கு செழிப்பை தருபவர் அவரே. நாம் விரும்பும் ஆசீர்வாதங்களை நமக்கு கொடுப்பவர் அவரே. ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு வேண்டிய ஆசீர்வாதங்களை தருவார். தாகத்தோடு அவரிடம் கேட்பவர்களை அவர் வெறுமையாய் அனுப்புவதில்லை. தாகமுள்ள அனைவரையும் அவர் தம்முடைய ஆவியால் நிரப்புகிறார். அவர் தாகமுள்ளவன்மேல் தண்ணீரை ஊற்றுகிற தேவன். வறண்ட நிலத்தை நீரூற்றாக மாற்றபவர் அவரே. நாம் பரிசுத்தமாக வாழும்போது நமக்கு பல ஆசீர்வாதங்களை தருகிறார். நாம் பரிசுத்தமாக வாழ நமக்கு உதவுபவர் அவரே. அவரால் ஆசீர்வதிக்கப்பட்டால் அது அழிந்து போகும் ஆசீர்வாதம் அல்ல. அது நித்தியமான ஆசீர்வாதம். அந்த ஆசீர்வாதத்தின் மூலம் நம் சந்ததியும் ஆசீர்வதிக்க படும். நம் சந்ததிக்கும் நம் மூலமாக நன்மைகள் கிடைக்கும். நாம் கர்த்தரை விசுவாசித்து அவருக்கு பிரியமாக வாழும்போது அவர் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க உதவி செய்வார்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.

0 Comments