இன்றைய வார்த்தை:
13.01.2024 / சனி 
வசனம்:
ஏசாயா‬ ‭43:18‭-‬19‬ 
"முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்."
 
செய்தி:
          நாம் ஒருபோதும் கடந்ததை நினைத்து கலங்க கூடாது. நடந்து முடிந்த காரியங்களை குறித்து ஒருபோதும் சோர்ந்து போக கூடாது.‌ இனி நடக்க போகும் காரியங்களை குறித்தும் ஒருபோதும் பயப்பட கூடாது. கடந்தவைகளை நினைத்து நம் மனதை பலவீனமாக்க கூடாது. கர்த்தரை நாம் விசுவாசிக்கும் போது அவர் நமக்காக எதையும் செய்வார். அவர் நம் வாழ்வில் நினைத்து பார்க்காத காரியங்களை செய்வார். புதிய காரியங்களை நம் வாழ்வில் தோன்ற பண்ணுவார்‌. அவரை விசுவாசிக்கும் போது நாம் முடியாதென்று நினைத்த காரியங்களை கூட நமக்கு கைகூடி வரப்பண்ணுவார். அவர் வனாந்திரத்திலே வழியை உண்டு பண்ணுகிறவர்‌. அவாந்திர வெளியில் ஆறுகளை தோன்ற பண்ணுபவர். நமக்கும் எண்ணி முடியாத அதிசயங்களை செய்வார். ஆகவே நாம் கடந்ததை நினைத்து இனி நடக்க போவதை நினைத்து ஒருபோதும் கலங்க கூடாது.

ஜெபம்:
      அனைத்து மக்களும் முந்தினதை யோசிக்காமல் கர்த்தரை உறுதியாக விசுவாசிக்க  ஜெபிப்போம்.