இன்றைய வார்த்தை:
12.01.2024 / வெள்ளி 
வசனம்:
‭‭ஏசாயா‬ ‭43:1‬ ‭
"இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்."
 
செய்தி:
            கர்த்தரே நம்மை உண்டாக்கினவர். அவரே நம்மை சிருஷ்டித்த தேவன். தம்முடைய ஜீவனை நமக்கு தந்து நம்மை நேசிக்கிறார். நாம் அவரை தெரிந்து கொள்வதற்கு முன்னமே அவர் நம்மை தெரிந்து கொண்டார். நம்மை தாயின் கருவில் உருவாக்கும் முன்னே தெரிந்து கொண்டார். அவர் நம்மை உருவாக்கினதால் நம்மை காத்து கொள்வார். எத்தீங்கும் அணுகாமல் நம்மை நடத்தி செல்வார். ஆகவே நாம் எதற்கும் பயப்பட கூடாது. அவர் நம்மை மீட்டு கொண்ட தேவன். நம்மை அவருக்காக வாழ அழைத்தார். நாம் அவருடையவர்களாக வாழ நம்மை தகுதி படுத்த வேண்டும். நமக்காக தம்மை பலியாக தந்த தெய்வத்துக்காக நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அவர் நாமத்தை நாம் உயிர் உள்ளவரையும் உயர்த்த வேண்டும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் நம்மை மீட்டு கொண்ட கர்த்தரை விசுவாசிக்க ஜெபிப்போம்.