11.01.2023 / வியாழன்
வசனம்:
ஏசாயா 42:3
"அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்."
செய்தி:
கர்த்தராகிய இயேசு நம்மேல் மிகுந்த கிருபையுள்ள தேவன். அவர் நம்மை அளவில்லாமல் நேசிக்கிறார். அவர் நம்மேல் இரக்கமாக இருக்கிறார். அவர் தாழ்வில் இருந்த நம்மை கிருபையால் உயர்த்தினார். வியாதியில் இருந்த நம்மை கிருபையால் சுகமாக்கினார். பாவத்திற்கு மரித்திருந்த நம்மை அவருடைய மகத்தான கிருபையால் இரட்சித்து மீட்டார். அவருடைய பிள்ளைகளாக நம்மை ஏற்றுக் கொண்டு பரிசுத்தப் படுத்தினார். ஒன்றுக்கும் உதவாத நம்மை அவருடைய இரத்தத்தினால் அவருக்காக தெரிந்து கொண்டார். அவர் தெரிந்த பாடலை முறியாத தேவன். நாம் நிலைநிற்க மாட்டோம் என்று எண்ணும் சூழ்நிலைகளை மேற்கொண்டு செல்ல நமக்கு உதவி செய்கிறார். நாம் விழுந்து விடுவோம் என்று நினைக்கும் நேரங்களில் அவற்றை தாண்டி செல்ல நமக்கு உதவுகிறார். அவர் மங்கி எரிகிற திரியை அணைக்காதவர். அவர் நம்மேல் தம்முடைய மேலான கிருபைகளை பொழிந்து தம்முடைய உண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறார்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கிருபையுள்ள கர்த்தரை விசுவாசிக்க ஜெபிப்போம்.

0 Comments