10.01.2024 / புதன்
வசனம்:
ஏசாயா 41:16
"அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக் கொண்டிருப்பாய்."
செய்தி:
நாம் எப்போதும் கர்த்தருக்குள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவருக்குள் எந்நேரமும் களிகூர வேண்டும். அவரை விசுவாசிக்கும் போது கர்த்தர் நம்மை அவரில் மகிழ பண்ணுவார். அவரை விசுவாசிக்கும் போது அவர் நம் மன விருப்பங்களை நிறைவேற்றுவார். அவருடைய சமூகத்தில் நமக்கு மகிழ்ச்சியை தருவார். நம் வியாகுலங்களை மாற்றி நமக்கு களிப்பை தருவார். நித்திய மகிழ்ச்சி நம் தலையின் மேலிருக்க பண்ணுவார். அவருக்குள் சந்தோஷமாக இருப்பார்கள் சூழ்நிலைகளை கண்டு சோர்ந்து போக மாட்டான். அவரை குறித்தே எப்போதும் மேன்மைப்பாராட்ட வேண்டும். பரிசுத்தராகிய அவரை அறிந்ததை குறித்தே நாம் பெருமை கொள்ள வேண்டும். ஒருபோதும் உலக காரியங்களை குறித்து பெருமை பாராட்ட கூடாது.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருக்க ஜெபிப்போம்.

0 Comments