01.01.2024 / திங்கள்
வசனம்:
ஏசாயா 33:15-16
"நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்."
செய்தி:
நாம் கர்த்தருக்கு பிரியமாக வாழ வேண்டும். அவர் விருப்பத்தையே நம் வாழ்வில் நிறைவேற்ற வேண்டும். அவர் சித்தத்தின்படி நடக்க வேண்டும். நாம் எப்போதும் சந்தோஷமாக இருந்து எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்து இடைவிடாமல் ஜெபிப்பதே அவருடைய சித்தமாக இருக்கிறது. அவருடைய சித்தத்தை நிறைவேற்றும் போது கர்த்தர் நம் வாழ்வில் அதிசயமாக செயல்படுகிறார். அவருடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமானால் நாம் பரிசுத்தமாக வாழ வேண்டும். நம் கைகள் தவறான காரியங்களை ஒருபோதும் செய்ய கூடாது. பரிசுத்தமான காரியங்களை மட்டுமே நம் கைகள் செய்ய வேண்டும். அவருக்கு பிரியமல்லாத இடங்களுக்கு நம் கால்கள் செல்ல கூடாது. நீதியின் வழியில் மட்டுமே நம் கால்கள் நடக்க வேண்டும். நம் வாயினால் செம்மையான காரியங்களை மட்டுமே பேச வேண்டும். அவருக்கு பிரியமல்லாத வார்த்தைகளை நம் வாயினால் பேச கூடாது. நம் கண்கள் ஒருபோதும் பாவமானவற்றை பார்க்க கூடாது. நம் கண்களினால ஒருபோதும் தவறான காரியங்களை வாசிக்க கூடாது. நாம் கால்கள் அவருடைய வார்த்தைக்கே எப்போதும் செவி கொடுக்க வேண்டும். நம் சிந்தையில் எப்போதும் அவரே நிறைந்திருக்க வேண்டும். அசுத்த சிந்தனைகளை நம்மில் இருந்து அகற்ற வேண்டும். அப்போது கர்த்தர் என்றும் நம்மில் இருப்பார். நமக்கு உயர்ந்த அடைக்கலமாக இருப்பார். நம்மை குறைவில்லாமல் போஷிப்பார்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தருக்கு பிரியமாக வாழ ஜெபிப்போம்.

0 Comments