இன்றைய வார்த்தை:
25.04.2023 / செவ்வாய் 
வசனம்:
யோபு 17:9 
"நீதிமான் தன்வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்."
செய்தி:
            கர்த்தரை நம்புகிற நீதிமான் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை. நீதியின் வழியில் நடப்பவன் வெட்கப்பட்டு போவதில்லை. நீதிமான் திடநம்பிக்கை உள்ளவன். நீதிமான் நித்திய அஸ்திபாரமுள்ளவன். நீதிமான் தன் வழியில் உறுதியாய் இருப்பான். நீதிமான் தன் வழியில் முன்னேறி செல்வான். அவனுக்கு எந்த குழப்பங்களும் இருக்காது. பரிசுத்தமான வாழ்க்கை வாழ்பவன் ஒருபோதும் வீழ்ந்து போவதில்லை. கர்த்தருக்கு பயந்து வாழ்பவனை கர்த்தர் பலப்படுத்துவார். பரிசுத்தமாக வாழ்பவனை கர்த்தர் மேன்மேலும் பரிசுத்தப்படுத்துவார். நாம் பரிசுத்தமாக வாழும்போது கர்த்தர் நம் துணையாக இருப்பார். அவர் நம் துணையாக இருக்கும் போது நாம் மேன்மேலும் பலப்படுவோம். நம் காரியங்கள் அனைத்தும் வாய்க்கும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் நீதியாய் வாழ்ந்து கர்த்தரை துணையாக கொள்ள ஜெபிப்போம்.